கமலஹாசன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிநடை கண்டுவரும் திரைப்படம் விக்ரம். படம் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை 3 நாட்களில் மட்டும் 150 கோடியை தாண்டியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
வருகின்ற நாட்களில் நிச்சயம் விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது பிரம்மாண்ட வசூலை அள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பவே கேஜிஎப், RRR நிகராக இந்த படம் தற்போது பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தான் டான் பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம்.
கமலை வைத்து ஒரு வேலையை செய்ய திட்டமிட்டுள்ளது லைக்கா நிறுவனம் கடைசியாக டான் படத்தை தயாரித்து வெளியிட்டது. படம் நல்ல வசூல் வேட்டையை நடத்தியது. அதேபோல கமலின் விக்ரம் திரைப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது படம் வெளிவந்து போட்ட பட்ஜெட்டையும் தாண்டி மிகப்பெரிய வசூலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.
இதை அறிந்து கொண்ட லைகா நிறுவனம் தற்போது ராஜ்கமல் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து இந்தியன் 2 படத்தையும் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்க காய் நகர்த்தி உள்ளது இது ஒர்க் அவுட் ஆகும் பட்சத்தில் மற்றொரு பிரமாண்ட படத்தில் கமல் நடிப்பது உறுதி.
ஏற்கனவே மக்கள் மத்தியில் இந்தியன் 2 படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. அது நடந்தால் கமலின் சினிமா பயணம் தொடமுடியாத உச்சத்தை எட்டும் மேலும் அந்தப் படம் மிகப் பிரம்மாண்ட ஒரு வசூலை அள்ளி இந்திய சினிமாவையே திரும்பிப் வைக்கும். ஆனால் கமல் எந்த மாதிரியான முடிவு எடுப்பார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.