முதல் முறையாக வில்லனாக நடிக்கப் போகும் விக்ரம் – அதுவும் சூப்பர் ஸ்டார் நடிகருக்கு எதிராக..

vikram-
vikram-

நடிகர் விக்ரம் சினிமா உலகில் தனது பயணத்தை தொடங்கிய நாளில் இருந்து இப்பொழுது வரையிலும் தேசமான திரையில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதில் இவரது நடிப்பு வியக்க வைக்கும் வகையில் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.

அதிலும் இவர் நடித்த ஒரு சில படங்களில் கெட்டப் வேற லெவல் மற்றும் அந்த கதைக்கு ஏற்றார்போல் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார். அந்த வகையில் சேது, பிதாமகன், ஐ போன்ற படங்களில் இவரது நடிப்பு மிரட்டும் வகையில் இருந்திருக்கும்  இப்பொழுது கூட கோப்ரா திரைப்படத்தில் கூட பல்வேறு விதமான கெட்டப்புகளில் போட்டு நடித்து அசத்தி வருகிறார்.

அதோடுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் படத்திலும் இவர் ஒரு அரசனாக நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது இப்படி வித்தியாசமான கதாபாத்திரங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் நடிக்கும் படங்கள் வித்தியாசமாக இருப்பதால் இவரது படத்திற்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

அண்மையில் கூட கார்த்திக் சுப்புராஜ் உடன் கைகோர்த்து இவர்  மகான் படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வியக்க வைக்கும் வகையில் இருந்தது அதனை தொடர்ந்து இவரது கையில் கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் கையில் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விக்ரம் தற்போது பிரபல சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் உலா வருகின்றன.

தெலுங்கு இயக்குனர் Trivikram இயக்கத்தில் டாப் ஹீரோ மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக விக்ரம் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது . முதல் முறையாக சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க போவதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.