சூர்யாவை தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தில் மேலும் ஒரு பிரபலம்.! கசிந்தது புதிய தகவல்.!

vikram
vikram

பொதுவாக சினிமாவில் ஒரு படத்தில் ஏதாவது ஒரு புதிய செயலை செய்திருந்தால் அதனை இரகசியமாக படக்குழு காத்துவரும் அந்தவகையில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்து இருந்ததை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தார்கள் ஆனாலும் எந்த வகையிலோ சூர்யா நடித்துள்ளது கசிந்தது.

சரி ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது என படக்குழுவும் சூர்யா நடித்து இருந்ததை உறுதி செய்துள்ளார்கள். இந்தநிலையில் சூர்யாவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலம் விக்ரம் திரைப்படத்தில் இணைந்துள்ளது ரகசியமாக இருந்து வருகிறது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்   உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம் இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

vikram
vikram

மேலும் சூர்யா விக்ரம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனாலும் சமீபத்தில் கமலஹாசன் பேட்டி ஒன்றில் சூர்யா நடித்துள்ளதை பற்றி கூறியிருந்தார். அப்படியிருக்கும் நிலையில் தற்போது சூர்யாவை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த வகையில் தற்போது விக்ரம் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே விக்ரம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.