பெயர் புகழ் சொத்து என சேர்த்து வைத்துவிட்டு இந்த ஒரே காரணத்தினால் உலகைவிட்டே சென்ற விக்ரம் படம் நடிகர்..!

mani-2

தமிழ் சினிமாவில் மலையாள நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ரசிகர்களை பெருமளவு கவர்ந்தவர் தான் காலபவன் மணி இவ்வாறு தன்னுடைய சிறுவயதிலிருந்து இசை, நடிப்பி, மேமிகிரி என பன்முகத் திறன் கொண்டவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கருப்பான தோற்றம் கொண்டது மட்டுமல்லாமல் சாதி அடிப்படையில் பல்வேறு  பாகுபாடு காரணமாக இவருடைய ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. இந்நிலையில் அவருடைய விடா முயற்சியின் காரணமாக கூத்துப்பட்டறை இவருக்கு தகுந்த வாய்ப்பு கொடுத்தது.

இவ்வாறு அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். இவர் இந்த இடத்திற்கு வர பல்வேறு அவமானங்களையும் கடந்து வந்துள்ளார் என்பது யாருக்குமே தெரியாது.

அந்த வகையில் மணி முதல் முதலாக ஆட்டோ ஓட்டுனராக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார் இதைதொடர்ந்து அவர் மலையாள திரைப்படம் ஒன்றில் ஆட்டோ ஓட்டுனர் ஆகவே அறிமுகமானார். இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் இவருக்கு மாபெரும் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.

அந்தவகையில் இத்திரைப்படத்தில் நடிகர் மணி விக்ரமுக்கு தேஜா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து இருப்பார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் மார்ச் 3 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொண்டார் அப்பொழுது திடீரென மயங்கி விழுந்து  இயற்கை எய்திவிட்டார்.

இவ்வாறு மணி இறக்கும் பொழுது அவர் சொத்து மட்டுமில்லாமல் இரண்டு பங்களா கார் என செழிப்பாக இருந்துள்ளார் ஆனால் இவர் எப்பொழுது குடி பழக்கத்திற்கு ஆளானாரோ அப்போது கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து விட்டார். இவ்வாறு நடந்த சம்பவத்தின் காரணமாக ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார்கள்.

mani-1
mani-1