தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உலகநாயகன் என்றும் போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சமீபத்தில் பல்வேறு திரைப்படங்களில் தோல்வியை சந்தித்தது தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருவது மட்டுமில்லாமல் புதுப்புது அப்டேட்டுகள் இணையத்தில் வெளிவந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக பல பேட்டிகளில் லோகேஷ் மற்றும் கமல் ஆகிய இருவரும் மாறி மாறி பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்களை பிடித்து பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள் அந்த வகையில் பகத் பாசில் கதாபாத்திரத்தில் அவருடைய கேங்கில் நடித்த ஒருவரிடம் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்துள்ளார்கள் அவர் வேறு யாரும் கிடையாது வானத்தைப்போல சீரியலில் நடித்துவரும் நாயகன்தான்.
இவர் அந்த சீரியல் மட்டும் இல்லாமல் பல்வேறு தொடர்களிலும் பல திரைப்படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடிப்பது மட்டுமில்லாமல் போலீஸ் கதாபாத்திரத்தில் பெருமளவு நடித்து வருகிறார் அந்த வகையில் ஏற்கனவே இவர் விஜய் நடிப்பில் வெளியான தெரி திரைப்படத்தில் கூட போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அப்போது ஸ்கூலில் ரவுடிகளை விரட்டுவதற்காக விஜய் வருவதற்கு முன்பாக முதலில் இவர் தான் வருவார் இவர் தற்போது விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் சீரியலில் நடிக்கும் பொழுது எப்படி இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
இந்த பிரச்சனை எனக்கு தெரியும் திரைப்படத்தில் இருந்தது அதனால்தான் அந்த திரைப்படத்தில் என்னால் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிக்க முடிந்தது ஆனால் இந்த சீரியலில் உள்ள கலைஞர்கள் அனைவரும் எனக்கு உதவியாக இருந்தார்கள். மேலும் இந்த சீரியல் இயக்குனரிடம் போய் கேட்பேன் அவர் முடியாது என்று சொன்னால் பட்டுன்னு காலில் விழுந்து விடுவேன் ஏனென்றால் இது ஒரு பெரிய ப்ராஜெக்ட் படம் அல்லவா ஏனென்றால் இரண்டிலும் நான் ஈடு கொடுத்து தான் ஆக வேண்டும் என நமது நடிகர் கூறியுள்ளார்.