பல வருடங்களாக கிடப்பில் கடந்த விக்ரமின் “கர்ணா” டீசர்.. இது சியானுக்கு தெரியுமா.?

Karna
Karna

Karna Movie teaser : நடிகர் கமலுக்கு அடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் விக்ரம். இவர்  ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் சமீபகாலமாக கதை தேர்வு செய்வதில் கோட்டை விடுகிறார் அதனால்  அவருடைய படங்கள் தோல்வியை தழுவுகின்றன.

இதிலிருந்து மீண்டு வர சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் கொண்டு வருகிறார் அந்த வகையில் பொன்னியின் செல்வன் பார்ட் 1, 2 படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்களான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  படம் முழுக்க முழுக்க கோலார் தங்க வயலில் தமிழர்கள் எப்படி கஷ்டப்பட்டனர்.

எப்படி வாழ்ந்தார்கள் என்பது குறித்து இந்த படம் பேசும் என பெரிய வருகிறது பலரும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் நடிகர் விக்ரம் நடித்துள்ள கர்ணா படத்தின் டீசர் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இது நடிகர் விக்ரமுக்கு தெரியுமா.? 2017 ஆம் ஆண்டு கர்ணா படத்தில் விக்ரம் கமிட் ஆனதாக கூறப்படுகிறது சில காரணங்களால் அந்த படம் எடுக்க முடியாமல் கிடப்பில் இருந்து வந்த நிலையில் டீசர் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க 3டியில் உருவாகி உள்ளது விக்ரம் அதில் செம்ம மாஸாக இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள்  டீசரை கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் பெரிய அளவில் பரப்பி வருகின்றனர். திடீரென படக்குழு டீசரை வெளியிட்டுள்ளதால் மீண்டும் கர்ணா  சூட்டிங் ஆரம்பிக்கப் போகிறதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதோ அந்த டீசரை நீங்களே பாருங்கள்..