வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம்.! சியான் 60 திரைப்படத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் இதுதானா.?

vikram09
vikram09

தமிழ் திரையுலகில் ஒரு கட்டத்தில் அனைவராலும் ராசியில்லாத நடிகர் என பெயர் எடுத்து வந்தவர் தான் விக்ரம் ஆனால் இவர் சேது திரைப்படத்தை தொடர்ந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு கை கொடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இவர் சேது திரைப்படத்தை தொடர்ந்து நடித்த திரைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே போனது.

மேலும் இவரைத் தொடர்ந்து தற்போது இவரது மகனும் இவரது வழியில் வலம் வருகிறார் ஆம் இவரது மகனான துருவ் விக்ரம் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது என்னவென்றால் இவரும் இவரது தந்தையுமான விக்ரம் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர்கள் சியான் 60 என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

ஆம் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் மேலும் சியான் 60 திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பாகங்கள் அனைத்தும் முடிந்து உள்ளதாக கூறப்படுகிறது அதே போல் விக்ரம் நடிக்கும் கதாபாத்திரம் நடந்து வருவதாகவும் இதற்கான படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.

vikram 98
vikram 98

இந்நிலையில் விக்ரமின் வித்தியாசமான புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் விக்ரம் பார்ப்பதற்கு வித்தியாசமான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இதனை பார்த்த ரசிகர்கள் இது கண்டிப்பாக அவர் சியான் 60 திரைப்படத்திற்காக தான் இப்படி ஒரு கெட்டப் போட்டு உள்ளார் என இந்த புகைப்படத்தை பகிர்ந்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.