சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தங்களை முழுமையாக அர்ப்பணிக்கிறார் ஆனால் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவை பப்ளிசிட்டிக்காக மட்டும் தான் பார்த்துக் கொள்கிறார்கள், ஒரு சில நடிகர்கள்தான் சினிமாவுக்காக எதையும் செய்து வருகிறார்கள், அவர்களைப்போல் கிடைப்பது மிகவும் அரிது தான்.
அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு பொக்கிஷம் போல் கிடைத்தவர் நடிகர் விக்ரம், இவர் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்தாலும் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அதே கதாபாத்திரமாகவே மாறி விடுவார்.
நடிகர் விக்ரம் திரைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் அந்த வகையில் ஐ, அண்ணியன், கடாரம்கொண்டான், சேது ஆகிய திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது உடலை பெரிய அளவு சிரமப்படுத்தி கொண்டு நடித்தார், இருந்தாலும் சமீபகாலமாக இவர் கதாபாத்திரமாகவே மாறினாலும் கதையில் சொதப்புவதாள் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
கமலஹாசன் தயாரிப்பில் விக்ரம் ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஒன்றை ரீமேக்கில் நடிப்பதாக இருந்தது அந்த திரைப்படத்தை இருமுகம் திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் தான் இயற்கை இறந்தார் படத்தின் பெயர் டோன்ட் ப்ரீத். இந்த ஹாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் விக்ரம் நடிக்க இருந்தார்.
ஆனால் அடுத்தடுத்த திரைப்படங்களில் விக்ரம் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் இந்த திரைப்படம் அப்படியே கைவிடப்பட்டது, டோன்ட் ப்ரீத் திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷனாக தான் கடாரம்கொண்டான் கதாபாத்திரம் கெட்டப் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.