நான்கு வருடங்கள் கழித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன விக்ரம் படத்தின் கதை ரொம்ப பிடித்து போகவே நடிகர் கமல் துணிந்து இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தார் மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் விக்ரம் படத்தை தயாரித்தது படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது.
கமல் கணித்தது போலவே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது மேலும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. விக்ரம் திரைப்படம் தற்போது வரை கிடைத்துள்ள தகவல் படி சுமார் 420 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பொழுதும் பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் ஓடுவதால் இன்னும் சில கோடிகளை அள்ளும் என தெரிய வருகிறது.
இதனால் படகுழு சந்தோஷமாக இருக்கிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசனுக்கு அடுத்தடுத்த புதிய படங்கள் மற்றும் பழைய படங்களை மீண்டும் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன அந்த வகையில் இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது.
மேலும் ஏற்கனவே தேவர் மகன் 2 பாகம் எடுக்க போகிறோம் என கூறி டைட்டிலை அறிவித்த உடன் இருந்த நிலையில் தற்போது அந்த படமும் தொடங்கப்படுகிறது இந்த படத்தில் கமலுக்கு மகனாக விஜய் சேதுபதியும், நாசர்க்கு மகனாக பகத் பாசிலும் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து சபாஷ் நாயுடு திரைப்படத்தையும் மீண்டும் தூசி தட்ட இருப்பதாக கூறப்படுகிறது விக்ரம் படத்தின் வெற்றியால் கமலுக்கு தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது இதனால் கமல் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்த ரெடியாக இருக்கிறார் மேலும் ரஜினி, விஜய் போன்ற நடிகர்களுக்கு போட்டியாக இவர் தற்பொழுது களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.