பணமே இல்லாமல் திண்டாடிய பாலா…! கையில் இருந்த பணத்தை அப்படியே தூக்கி கொடுத்த நடிகர்.!

bala
bala

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் பாலா இவர் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் தயங்குவார்கள் ஏனென்றால் இவர் திரைப்படத்தில் பாலா சொல்வது தான் நடிகர் நடிகைகள் கேட்டாக வேண்டும் இல்லை என்றால் நடப்பதே வேறு. அதேபோல் பாலா திரைப்படத்தில் வித்தியாசமான நடிப்பு எதார்த்தமான கதாபாத்திரம் எதார்த்தமான நடிப்பு என அனைத்தையும் கலைஞர்களிடம் இருந்து வாங்கிடுவார்.

அதனால் தான் பாலா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது இன்று பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தாலும் ஒரு காலகட்டத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வந்துள்ளார் பாலா. இயக்குனராக அறிமுகமாகி தன்னுடைய முதல் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டினாலும் பணரீதியாக அந்த திரைப்படம் வசூல் செய்ய முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய முதல் திரைப்படமான சேது திரைப்படம் ஆரம்பிக்கும் பொழுது பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார் பாலா. சேது திரைப்படத்தில் நடித்த விக்ரம் எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்து உயரத்தை தொட்டு விட வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். ஆனால் விக்ரமுக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் நடிகை ராதிகாவிடம் கூறி சீரியலில் நடிக்க முடிவு செய்தார் அப்பொழுது பாலா விக்ரமுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க முன் வந்தார் உடனே ராதிகாவிடம் சென்று ஒரே ஒரு படம் வாய்ப்பு வந்துள்ளது அந்த திரைப்படம் ஓகே ஆகிவிட்டால் சினிமா பயணம் தொடரும் அப்படி இல்லை என்றால் நான் சீரியலுக்கு நடிக்க வந்து விடுகிறேன் என கூறியுள்ளாராம்.

ஆனால் திடீரென சில பிரச்சனைகளால் சூட்டிங் பல மாதங்களாக நிறுத்தப்பட்டது அதனால் சீரியலுக்கே செல்ல முயற்சித்த விக்ரம் சீரியலுக்காக ராதிகா அவர்களிடம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுள்ளார். சீரியல் ஆரம்பிக்கும் நேரத்தில் பாலா சேது திரைப்படத்தினை இயக்க ஆரம்பித்தார் அதனால் மீண்டும் ராதிகாவிடம் அப்படியே சொல்லிவிட்டு படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அந்த சமயத்தில் பாலா பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார் அதனால் ராதிகாவிடம் இருந்து அட்வான்ஸ் தொகையாக வாங்கிய 60,000 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரத்தை பாலாவிடம் கொடுத்து ஊக்கப்படுத்தி உள்ளார் விக்ரம் அதன் பிறகு சேது திரைப்படம் முடிந்துள்ளது சேது திரைப்படம் வெளியாகி பாலாவின் வாழ்க்கையே மாற்றி விட்டது.