நடிப்பு அரக்கன்களுடன் மோதும் சிவகார்த்திகேயன்.! பொங்கல் ரேசில் அயலானுடன் மோதும் திரைப்படம்.!

ayalaan release date details
ayalaan release date details

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். ஏலியன் தொடர்பான கதையை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இதற்கு முன்பு ரவிக்குமார் இன்று நேற்று நாளை என்ற திரைப்படத்தை இயக்கியவர், அயர்லான் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார் மூன்று ஆண்டுகளாக இந்த திரைப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது எப்படா இந்த திரைப்படம் வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு வழியாக விடிவு காலம் வந்துவிட்டது.

அயர்லான்  திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் ஆக தாமதமானது இந்த நிலையில் ஒரு வழியாக படப்பிடிப்பு பணியை படக்குழு முடிக்க போகிறார்கள் அதனால் திரைப்படத்தை வருகின்ற பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து இயக்குனர் ரவிக்குமார் பொங்கல் அன்று அயலான் திரைக்கு வரவேற்கிறது உங்கள் மேலான ஆதரவை எதிர்நோக்கி இருக்கிறோம் நிச்சயம் அயலான் உங்களை மகிழ்விப்பான் என இயக்குனர் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அயலான் திரைப்படத்துடன் மேலும் நடிப்பு அரக்கர்களின் திரைப்படம் மோத இருக்கிறது.

அதாவது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியிட ஏற்கனவே பட குழு முடிவு செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய கல்கி திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய நெருக்கடியை இந்த இரண்டு திரைப்படங்களும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் அயலான் திரைப்படத்தின் வசூல் பாதிக்குமா என்ற நோக்கத்தில் பலரும் இருந்து வருகிறார்கள் ஏனென்றால் விக்ரம் நடிப்பு அரக்கன் என அனைவருக்கும் தெரியும் அதேபோல் பிரபாஸ் திரைப்படம் வசூல் வேட்டை நடத்துவதில் வல்லவர் இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் நிலைமை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ayalan release date
ayalan release date