தளபதி 67 படத்தில் இணையும் விக்ரம் பட நடிகை.? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..

vijay
vijay

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தனது 67வது படம் குறித்த அப்டேட்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அப்படி இந்த படம் குறித்து தற்போது வந்த தகவல் என்னவென்றால் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம்.

இந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் தளபதி 67 படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. ஆம் விக்ரம் படத்தில் கமலுக்கு மகளாக சுவஸ்திகா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் லோகேஷ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஹேஷ் டேக் தளபதி 67 என பதிவிட்டுள்ளார். இதனால் சுவஸ்திகா கிருஷ்ணன் தளபதி 67 இல் இணை உள்ளார் என தெரிய வருகிறது.

அண்மையில் கூட லோகேஷ் அவரது தளபதி 67 படத்திற்காக லொகேஷன் பார்த்து வருவதாக பதிவிட்டுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் நாளுக்கு நாள் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் குறித்த தகவல் வெளிவந்த வண்ணமே இருக்கின்ற நிலையில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தற்போது விஜய் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இந்த படம் அடுத்த ஆண்டு முதலிலே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வாரிசு படம் வெளிவந்த சில நாட்களிலேயே பெயர் வைக்கப்படாத விஜயின் அடுத்த படம் தொடங்கும் எனக்கு தெரிய வருகிறது. அதற்காக இயக்குனர் லோகேஷ் படத்தின் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிகர் நடிகைகள் மற்றும் இடம் போன்றவற்றை தேர்வு செய்து வருகிறார்.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகும் என தகவல் வெளிவந்தது அதைத்தொடர்ந்து சமந்தா த்ரிஷா போன்றவர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.