லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் கமல் உடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் தவறுகள் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீசிர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த ட்ரெய்லரில் ஒரு ஆபாச வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் கமல்ஹாசனை இப்படி பேசி உள்ளார் இன்று அதிர்ச்சியில் உள்ளனர்.
விக்ரம் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்து தெருவிக்கும் விதத்தில் மதுரை மண்டல மக்கள் நீதி மையம் கட்சியினர் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர் தான் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டர்களில் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…. என்று குறிப்பிட்டு ட்ரெய்லரில் கமல் பேசும் ஆபாச வார்த்தை சேர்த்து பார்த்துக்கலாம் என்ற வசனத்துடன் கூடிய வகையில் மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து மதுரை மண்டல மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகலான கதிரேசன் மற்றும் வினோத், சேது ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.