கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் 2 இன்று வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சியான் விக்ரம் பொன்னியின் செல்வன் 2 ரசிகர்களுடன் இணைந்து தியேட்டரில் பார்த்த மகிழ்ந்த நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ் உருவாக்கப்பட்டது.
மேலும் பல மொழிகளிலும் டப் செய்யட்டும் வெளியாகி இருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை கொஞ்சம் கூட மாற்றாமல் அப்படியே மனிதத்தினால் இயக்கியுள்ளார் எனவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வந்தனர்.
இவ்வாறு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்று வெளியான பொன்னியின் செல்வன் 2 ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சில நாட்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கும் பிரபலங்கள் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் ஏராளமான இடங்களுக்கு சென்றிருந்தார்கள்.
அந்த வகையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, மணிரத்தினம், ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பலரும் ரசிகர்களுடன் நேரில் சுற்றி திரிந்தனர். இவ்வாறு பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்து மிரட்டிய விக்ரம் சென்னை வடபழனியில் உள்ள பளாஸோ திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு கழித்த நிலையில் அங்கு ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் இதனைத் தொடர்ந்து சியான் விக்ரமுவுடன் நடிகர் ஜெயராமன் பொன்னியின் செல்வன் 2 படத்தினை பார்க்க வந்திருந்த நிலையில் அங்கு ரசிகர்களுடன் சில மணி நேரங்கள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.