விக்ரம், துருவ் விக்ரம் மிரட்டியுள்ள “மஹான்” படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சான்றிதழ் என்ன தெரியுமா.? 

mahaan
mahaan

திரை உலகில் சமீபகாலமாக அப்பா மகன்கள் இருவரும் இணைந்து படங்களில் நடித்து அசத்துகின்றன அவர்களில் ஒருவராக இணைந்து உள்ளவர்கள்தான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து ஏற்கனவே ஆதித்யா வர்மா திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் “மஹான்” படத்தில் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக என தெரியவந்துள்ளது இந்த திரைப்படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம்  ஆகியோருடன்  இணைந்து பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்  மஹான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் மாறுதலாக OTT தளத்தில் வெளியாக இருக்கிறது. ஆம் அமேசான் OTT தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை இருப்பினும் வருகின்ற ஜனவரி 26 அல்லது பிப்ரவரி மாதம் ஆரம்பத்தில் வெளியாகலாம்.

இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் மஹான் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் உச்சத்தில் இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் மஹான் படத்தின்  சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் ஆகியவை பற்றி வெளிவந்துள்ளது. படம் 2 மணி நேரம் 43 நிமிடம், யு/ஏ சான்றிதழ்  பெற்றுள்ளது. இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் தற்போது பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.