தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்,இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, மேலும் கௌதம் மேனனுக்கு சினிமாவில் தனி இடம் உண்டு. இந்நிலையில் கௌதம் மேனன் சூர்யாவிற்கு காக்க காக்க வாரணம் ஆயிரம் ஆகிய திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் மற்றும் சூர்யாவுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இன்று வரை இணையாமல் இருக்கிறார்கள், இவர்கள் இணைந்து உருவாக்கிய திரைப்படம் ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் சூர்யா மற்றும் கௌதம் மேனன் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இவர்களுக்கு இடையே இருந்த மனக் கசப்பை ஓரங்கட்டி வைத்துவிட்டு மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன, இந்தநிலையில் சூர்யாவுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முதன் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தார், கௌதம்மேனன் துருவநட்சத்திரம் பாதி கதையை நடிகர் சூர்யாவிடம் கூறியுள்ளார், பிறகு சூர்யாவை வைத்து படத்தை இயக்க தயாராகிவிட்டார்.
அதேபோல் சூட்டிங் நடைபெற இருந்தது ஆனால் சூர்யா முழுக்கதையையும் கேட்ட பிறகு தான் நடிப்பேன் என கூறிவிட்டாராம், அதன் பிறகு கௌதம் மேனன் உங்களுக்கு ஹிட் கொடுத்த என்னையே நீங்கள் நம்ப மாட்டீர்களா என கேட்டுள்ளார் அதனால் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை முற்றியதால் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தான் இவ்வளவு நாள் சூர்யா மற்றும் கௌதம் மேனன் இணையாமல் இருந்து வந்துள்ளார்கள், ஆனால் தற்போது கௌதம் மேனன் கமல் காதம்பரி என்ற இசைக் கலைஞரின் காதல் கதையை படமாக்க இருக்கிறார், இந்த கதையை சூர்யாவை மனதில் வைத்துதான் உருவாக்கியுள்ளாராம் கௌதம் மேனன். இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் இடம்பெற்றுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஊரடங்கு முடிந்தவுடன் திரைக்கு வர இருக்கிறது இதனை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.