தங்கலான் படப்பிடிப்பு முடிந்ததை உறுதி செய்த விக்ரம்.! வைரலாகும் எமோஷனலான பதிவு..

thangalaan
thangalaan

தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திரைவுலகிற்கு அறிமுகமான நிலையில் பிறகு தனது கடின உழைப்பினால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

விக்ரம் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் கடைசியாக ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்திருந்தார். இதில் பலவிதமான கெட்டப்புகளில் நடித்திருந்தது பாராட்டப்பட்டது. ஆனால் சொல்லும் அளவிற்கு இந்த படம் வெற்றி பெறவில்லை இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை கண்டது மேலும் இவருடைய கேரக்டரும் பாராட்டப்பட்டது தற்பொழுது விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பு இருக்கும் நிலையில் கேஜிஎஃப் இல் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படமும் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பார்வதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப் குறித்த கதை என்று பா ரஞ்சித் கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஒத்திகை பார்க்கும்பொழுது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டது இதனால் விலா எலும்பு முறிந்தது எனவே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிறகு குணமடைந்த உடன் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்தார்.

இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது எனவே இது குறித்து விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் படப்பிடிப்பு நிறைவடைந்தது, என்ன ஒரு அற்புதமான பயணம், மிகவும் அற்புதமான சில நடிகர்களுடன் பணி புரிந்ததில் ஒரு நடிகராக நல்ல சில அனுபவங்களை நான் அனுபவித்தேன், முதல் புகைப்படத்துக்கு கடைசி புகைப்படத்திற்கு இடையே 118 நாட்கள் படப்பிடிப்பு இருந்தது எங்களை இந்த கனவில் வாழ வைத்த இயக்குனர் ரஞ்சித்துக்கு மிக்க நன்றி ஒவ்வொரு நாளும் என்று பதிவு செய்துள்ளார் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.