வெளிநாட்டில் வசூல் வேட்டை நடத்தும் விக்ரம் – முதல் நாள் மட்டுமே இவ்வளவா.? வியப்பில் ரசிகர்கள்.

kamal-vijay-sethupathi-naren
kamal-vijay-sethupathi-naren

உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களுக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் தான் விக்ரம் இந்த படத்தை முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இவர் விக்ரம் படத்திற்கு முன்பாக கைதி, மாஸ்டர் ஆகிய ஆக்சன் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடதக்கது.

இதனால் விக்ரம் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது படம் நேற்று கோலாகலமாக வெளியானதையடுத்து படம் முழுக்க முழுக்க ஆக்சன் சீன்களுக்கு பஞ்சமில்லாமல் சென்டிமென்ட் கலந்து எடுத்திருந்ததால் படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, நரேன் போன்றவர்கள் அனைவருமே நடிப்பில் மிரட்டி உள்ளதால் படத்திற்கு செம்ம வலு சேர்கிறது. விக்ரம் திரைப்படம் நீண்ட நாட்கள் ஓடுவதோடு  மட்டுமல்லாமல் மிக பிரம்மாண்டமான ஒரு வசூலை அள்ளும் என கூறப்படுகிறது.

குறிப்பாக புஷ்பா, கே ஜி எஃப் 2, RRR போன்ற படங்களின் வசூலுக்கு நிகராக விக்ரம் திரைப்படம் அள்ளும் என்பதே சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில்  வெளிநாடுகளில் விக்ரம் திரைப்படம் எவ்வளவு முதல் நாள் வசூலித்து உள்ளது என்பது குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.

USA – வில் விக்ரம் திரைப்படம் 750 டாலர் வசூல் செய்துள்ளது. நியூசிலாந்தில் NZ – $ 27204, அமெரிக்காவில் S – $ 233754 விக்ரம் படம் ஆகிய இடங்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.