சத்தமே இல்லாமல் வெளியாகிய விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் மாஸ் அறிவிப்பு.!

vikram-cobra
vikram-cobra

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தான் நடிக்கும் திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள்வார். ஏனென்றால் தான் நடிக்கும் திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொள்வார்.

இந்த நிலையில் விக்ரம் கடைசியாக தன்னுடைய மகன் துருவ் விக்ரம் அவர்களுடன் இணைந்து மஹான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது இந்த நிலையில் அடுத்ததாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, வருகின்ற மே இருவத்தி ஆறாம் தேதி விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாஸ் தகவலை கொண்டாடிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு மாஸ் அப்டேட்களை வெளியிட்டுள்ளது படக்குழு.

அந்த வகையில் கோப்ரா  திரைப்படத்தின்   இரண்டாவது சிங்கிள் பாடல்  ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17-ஆம் தேதி  விக்ரமின் பிறந்தநாள் என்பதால் அவருடைய ரசிகர்களுக்கு விருந்தாக கோப்ரா திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி  நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரபல கிரிக்கெட் வீரர் ஈர்ப்பான் பதான் தான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் கோப்ரா திரைப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது.