லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாக வேண்டியது ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது, மேலும் இந்த திரைப்படத்தை விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ உடன் இணைந்து 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரித்து வருகிறார்.
மேலும் லலித்குமார் விக்ரம் நடித்துவரும் கோபுர திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார், ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை தயாரித்து வரும் லலித்குமார் விநியோகஸ்தரிடம் முன்பணமாக ஒரு பெரிய அமௌண்டை வாங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படம் வியாபாரங்கள் அனைத்தும் முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் வினியோகஸ்தர்கள் பணத்தை திரும்பி கேட்க தொடங்கி விட்டார்களாம், ஆனால் படம் ரிலீஸ் ஆக லேட் ஆவதால் விநியோகஸ்தர்களுக்கு தன்னுடைய கோப்ரா திரைப்படத்தை விலையைக் குறைத்து தருவதாக வாக்குறுதி கொடுத்து விட்டாராம் லலித் அதனால் விநியோகஸ்தர் காட்டில் அடை மழை தான் எனக் கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.
லலித் குமாரின் இந்த சுமூகமான முடிவு தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான அடிதளம் என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள், இனி விநியோகஸ்தர்களால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்ற நம்பிக்கையும் வந்துள்ளது.