தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் நடிப்பில் சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு எந்த படமும் வெற்றியை பெறாமல் இருந்து வரும் நிலையில் தற்போது வெற்றி திரைப்படத்தினை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய விடாமுயற்சியுடன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நம்பிக்கையுடன் நடித்து வருகிறார்.
நடிகர் விக்ரம் தான் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் இவருடைய படத்திற்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் இதன் மூலம் வெற்றினை கண்டு இருக்கும் நிலையில் தற்பொழுது தங்கலான் படத்தில் சோலோவாக நடித்து வருகிறார். இந்த படத்தினை பா ரஞ்சித் இயக்கி வரும் நிலையில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் நீலம் ப்ரோடுக்ஷன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தில் விக்ரம் கெட்டப் புகைப்படங்கள் வெளியான நிலையில் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படம் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் மூலம் கண்டிப்பாக வெற்றியை கண்டு விடலாம் என்ற நம்பிக்கையில் விக்ரம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்த படத்தின் 65 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்க முடிவெடுத்துள்ளனர்.
எனவே இந்த படத்தின் முழு படப்பிடிப்பு பிரமோஷன் பணிகள் போன்றவை முடிந்து இந்த வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதே நேரத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படமும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்து இருக்கும் நிலையில் விக்ரமின் தங்கலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது எனவே இவர்களில் யாருடைய திரைப்படம் நல்ல வெற்றினை பெருமென எதிர்பார்க்கப்படுகிறது.