தமிழ் சினிமாவில் திரைப்படத்திற்காக தன்னையே மாற்றிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது விக்ரம் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் விக்ரம் மட்டுமின்றி கார்த்திக் ஜெயம் ரவி நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய மிகப்பெரிய அளவு பாராட்டை பெற்றுள்ளது.
மேலும் நீண்ட வருடங்களாக எடுக்க வேண்டும் என மணிரத்தினம் கனவு காண்ட நிலையில் இந்த திரைப்படம் தற்பொழுது நினைவாக மாறிவிட்டது மேலும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக அமைந்தது மட்டுமில்லாமல் இவற்றை மிகவும் தத்ரூபமாக இயக்கியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம் நடித்த ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மற்றொரு வரலாற்று திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஹிந்தியில் அலாவுகிக் தேசாய் என்ற இயக்குனருடன் இணைந்து ராமாயண கதை அம்சம் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் கதாநாயகனாக நடிக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் கங்கானா ராணாவத் நடிக்க உள்ளார்.
மேலும் பாகுபலிக்கு கதை வசனம் எழுதிய விஜயந்திர பிரசாத் இந்த திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது மேலும் இந்த திரைப்படம் பலமொழிகளில் வெளியிட உள்ளதாக பட குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
அது மட்டும் இல்லாமல் அதற்கு தகுந்தார் போல் பல்வேறு நட்சத்திரங்களையும் இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க பட குழுமினர்கள் திட்டமிட்ட நிலையில் விக்ரமிற்கு இந்த திரைப்படத்தில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுக்க போகிறார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.