தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகரை ரசிகர்கள் உலகநாயகன் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது வழக்கம் தான் அந்த வகையில் இவருடைய நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமான கதையம்சம் கொண்டது மட்டுமில்லாமல் தோற்றம் உடையதாக இருக்கும்.
அந்த வகையில் நடிகர் கமலஹாசன் சமீபத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதில் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் போன்றவர்கள் நடித்தது மட்டுமில்லாமல் விஜய்சேதுபதிக்கு மனைவியாக மைனா நந்தினி, சிவானி நாராயணன், vj மகேஸ்வரி போன்ற சீரியலில் செம பிஸியாக இருந்த கதாநாயகிகளை தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது பழிவாங்கும் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இருப்பினும் அந்த கதாபாத்திரத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகவும் வித்தியாசமாகவும் ரசிகர்களுக்கு ஏற்றார் போல இந்த திரைப்படத்தில் காட்டியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படமானது சுமார் பல கோடி முதல் போட்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக இருப்பினும் தமிழகத்தில் வெறும் மூன்று நாட்களில் மட்டும் 65 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் வசூலை பார்த்தால் மிக விரைவில் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் வசூலைப் மிஞ்சிவிடும் என்பது நன்றாகவே தெரிகிறது.
மேலும் பாகுபலி இரண்டாம் பாகத்தின் வசூலையும் இந்த திரைப்படம் அசால்டாக வென்று விடும் என்பது தெரிந்த விஷயம் தான்.இந்நிலைகள் இந்த திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் மட்டுமின்றி ரசிகர்களும் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.