விக்ரம் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய திரைபடம்..! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப் போட்டுடும்..!

vikram-1

தமிழ் சினிமாவில் தான் தான் பெரிய ஹீரோ என பீத்திக் கொள்ளாமல் எப்படி ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அதற்கு தகுந்தார் போல் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி வரும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பது மட்டும் இல்லாமல் தற்சமயம் பிரபல முன்னணி நடிகர்களின் திரை படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த பேட்டை மற்றும் மாஸ்டர் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைய உள்ளார்கள் மேலும் இந்த பிரம்மாண்டமான இந்த திரைப்படத்தின் கதையை நடிகர் கமல்தான் எழுதி உள்ளாராம்.

kamal-11
kamal-11

இவ்வாறு கமல் எழுதிய கதையில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக வெளிவந்த செய்தி மூலம் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் இத்திரைப்படத்தை கமல் தயாரிப்பதில் மூலமாக இது தேவர் மகன் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் சிலர் பேசி வருகிறார்கள் ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த மெகா ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தால் கண்டிப்பாக மாபெரும் ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.