நடிகர் சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதேபோல் இவரின் திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார். ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டுமென தனது உடலை வருத்தி நடிக்கக் கூடியவர்.
60 வயது தாத்தா கதாபாத்திரமாக இருந்தாலும் சரி 20 வயசு காலேஜ் பையனாக நடிக்க வேண்டும் என்றாலும் சரி கன கச்சிதமாகப் பொருந்த கூடிய ஒரே நடிகர் சியான் விக்ரம் தான். இந்த நிலையில் தற்போது விக்ரம் மற்றும் துருவம் விக்ரம் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் 60 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி விக்ரம் விவேக்கின் மறைவு தெரிந்ததும் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவில்லை அந்த அளவுக்கு அவர் மீது அன்பு வைத்திருந்தார் அதேபோல் விவேக்கின் மரணத்தினால் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தன்னுடைய அப்பாவின் பிறந்த நாலுக்கு மிகவும் தாமதமாக வாழ்த்துக் கூறி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் இருவரும் 22 வயது இளைஞன் போல் போஸ் கொடுத்துள்ளார்கள்.
அந்த புகைப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தான் இளமையாக இருக்கிறார் என்று பார்த்தால் விக்ரம் அவரை விட மிகவும் இளமையாக இருக்கிறார். இருவரும் உடலை கரடுமுரடாக கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இருவரும் அப்பா மகனாக இல்லை அண்ணன் தம்பியா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் அந்தப் புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேல் லைக் கிடைத்துள்ளது அச்சசல் பார்ப்பதற்கு அண்ணன் தம்பி போலவே இருக்கும் இவர்களின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிகமாக லைக் போட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.