படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்தகட்ட வேலையில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம்..! மகான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

mahan-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் இவர்  திரை உலகில் முதன்முதலாக டப்பிங் ஆர்டிஸ்டாக தான் பணியாற்றியிருந்தார் அதன்பிறகு தன்னுடைய சிறந்த திறமையின் மூலமாக படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்தார்.

இவ்வாறு திரை உலகில் வந்த பிறகு இவருடைய நடிப்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு திரைப்படத்திற்காகவே தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான செய்து காசி, அந்நியன், ஐ போன்ற திரைப்படங்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது தன்னுடைய மகனையும் சினிமாவில் நுழைத்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற காரணத்தினால் அயராது பாடுபட்டு வருகிறார். அந்தவகையில் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் எனது மகன் துருவ் விக்ரம் அறிமுகப்படுத்தினார்.

ஆனால் இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை இதனை தொடர்ந்து தற்போது தன்னுடைய மகனுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது பிரபல முன்னணி இயக்குனர்களின் திரைப்படம் என்பதன் காரணமாக இத்திரைப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்தவகையில் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவருமா அல்லது இணையத்தில் வெளிவருமா என ரசிகர்கள் இன்றும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இந்த திரைப் படத்திற்கான டப்பிங் பணியை படக்குழுவினர்கள் தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் தற்போது விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம்  இருவரும் டப்பிங் பேசும் புகைப்படத்தை அவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

mahan-1
mahan-1