சியான் 60 திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்..! கொண்டாட்டத்தில் சியான் ரசிகர்கள்..!

vikram65

vikram 60 movie latest update: தமிழ் திரையுலகில் தற்போது மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இவர் சமீபத்தில் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் நமது இயக்குனர் தற்போது ஜகமே தந்திரம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமிபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த  நிலையில் இந்த திரைப் படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் மிக தீவிரமாக இறங்கி உள்ளார்களாம்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரையும் வைத்து ஒரு ஆக்சன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் அவர்களும் நடித்து வருகிறார்.

இவ்வாறு மிக பிரமாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளாராம் மேலும் இந்த திரைப்படத்திற்காக துரு விக்ரம் தன்னுடைய உடலை மிக  கட்டுமஸ்தாக ஏற்றியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம்  பார்ப்பதற்கு காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என வாணி போஜன் கூட சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜகமே தந்திரம் புரோமோஷன் பற்றி பேசுகையில் கார்த்திக் சுப்புராஜ் சியான் 60 திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துவிட்டது  என்று கூறியதன் காரணமாக விக்ரமின் ரசிகர்கள் மிக சந்தோஷத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் விக்ரமின் மெகாஹிட் திரைப்படமாக இது அமையும் என பலர் கூறி வருகிறார்கள்.

chiyan 60
chiyan 60