மாமியாருக்கு முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்.! பரபரப்பை கிளப்பிய புகைப்படம்.

viknesh shivan
viknesh shivan

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றார்.

நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது அதனைத் தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தை இயக்கினார் தற்பொழுது இவர் அஜித் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அஜித்தின் திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளில் மும்பரமாக இருக்கிறார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த நயன்தாராவை காதலிக்க தொடங்கினார் பல வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். ஆனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதை வெளியே கூறாமல் மௌனம் காத்து வந்தார்கள். விடுமுறையை கழிப்பதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள் இவர்கள் வெளியிடும்  புகைப்படம் ரொமான்ஸ் புகைப்படமாக இருந்தது அதனால் இவர்கள் இருவரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என ஆர்வத்துடன் இருந்தார்கள்.

இந்த நிலையில்  சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பாரா மாட்டாரா என பலரும் கேள்விக்குறியாக பார்த்தார்கள் ஆனால் திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா நடித்து வருகிறார்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும்  தாய்லாந்தில் ஒரு வாரம் ஹனிமூன் கொண்டாடி வந்தார்கள் தற்பொழுது ஸ்பைனில்  இருவரும் ஹனிமூன் கொண்டாடி வருகிறார்கள் அங்கு எடுக்கப்பட்ட ரொமாண்டிக் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் விக்னேஷ் சிவன்  அவர்களின் மாமியாருக்கு அதாவது நயன்தாராவின் அம்மாவிற்கு பிறந்தநாள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து கூறும் வகையில் தனது மாமியாரை நெற்றியில் முத்தம் கொடுத்து போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார் அதற்கு கேப்ஷானாக   என்னுடைய இன்னொரு அம்மா என பதிவு செய்துள்ளார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புள்ள ஓமணக் குரியன் என் மற்றொரு அம்மா நான் எப்பொழுதும் மிகவும் நேசிக்கும் ஒரு பெண், அழகான இதயத்துடன் ஒரு தூய்மையான ஆன்மா.

உங்கள் நல்ல ஆரோக்கியம் அமைதி மகிழ்ச்சி மற்றும் நிறைய ஆசீர்வாதங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.

viknesh shivan
viknesh shivan