காதலருடன் காற்றுபுகாத அளவுக்கு கட்டி அணைத்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்ட நயன்தாரா!! புகைப்படத்தைப் பார்த்து விக்னேஷ் சிவனை கரித்துக் கொட்டும் ரசிகர்கள்..

nayanthara and vignesh shivan

தங்களது ரொமான்டிக் புகைப்படத்தினால் 90’s கிட்ஸ்சை மிகவும் வெறுப்பேற்றி வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். சமீப காலங்களாக இவர்கள் தான் சோஷியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார்கள். அதோடு அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா போன்றவர்களுக்கு அடுத்ததாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்களின் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் நானும் ரவுடிதான். படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டுள்ளது அது போகப் போக காதலாக மாறி கடந்த ஐந்து வருடங்களாக  கோலிவுட்டில் டாப் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பல திரைப்பிரபலங்களும் இவர்களின் உறவு இன்னும் ஒரு வருடத்திற்க்குலேயே முறிந்துவிடும் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்து வந்தவர்களையும் பார்த்தோம் ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் இவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல் வெளிநாடுகளில் பயணம் செல்வது என அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் விக்னேஷ் சிவனிடம் எப்பொழுது நீங்கள் நயன்தாராவை திருமணம் செய்து கொள்வீர்கள் அதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் ரொம்ப செலவாகும் ப்ரோ.. கல்யாணம் மற்றும் மற்ற விஷயங்களுக்கு, அதுக்காக நான் பணம் சேர்த்துக் கொண்டு இருக்கிறேன்.. கொரோனா செல்வதற்காகவும் காத்திருக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

nayanthara viknesh shivan 2
nayanthara viknesh shivan 2

இந்த தகவல் தாறுமாறாக இணையதளத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வெளியிட்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் முரட்டு சிங்கில்சை வெறுப்பேற்றி வருகிறார்கள்.

viknesh shivan nayanthara 1