விஜய் டிவியில் தொடர்ந்து நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவரை என்ன தான் பங்கமாக கலாயித்தாலும் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் கேரக்டர் உடையவர்.இந்தக் காரணத்தினாலேயே இவரை பலருக்கு பிடித்தது.
இவர் தற்பொழுது சூப்பர் சிங்கர் 8 மற்றும் ஸ்டார் மியூசிக் போன்றவற்றை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் விஜய் டிவியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலே காதல் என்ற புதிய நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை காதல் ஜோடிகள் மற்றும் புதிதாக திருமணமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அர்ச்சனா காதலே காதல் நிகழ்ச்சியைை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து விஜய் டிவியில் பணப்புறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் ஜீ தமிழில் தனது மகளையும் தொகுப்பாளினியாக அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் ரசிகர்கள் பிரியங்காவிற்கு போட்டியாக தொகுப்பாளினி அர்ச்சனாவை விஜய்டிவி களமிறக்கி விட்டார்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.