புல்லட்டில் நயன்தாரா, சமந்தாவுடன் ஹாயாக ரைடு போகும் விஜய் சேதுபதி!! வாழ்வு தான்.. வைரலாகும் புகைப்படம்.

vijay-sethupathi (1)
vijay-sethupathi (1)

நடிகர் விஜய் சேதுபதி தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படத்தில் இருந்து இரண்டு காதல் என்கின்ற சூப்பரான லவ் ஃபெயிலியர் பாடல் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது அந்த திரைப்படத்தில் இருந்து வெளியான பைக் ஃபோட்டோ ஒன்று தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
மேலும்  முதல் முதலில் நயன்தாராவும் விஜய்சேதுபதியும் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் கமிட்கி நடிக்க ஆரம்பித்தார்.

அந்த திரைப்படத்தை இயக்கிய போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆறு வருடம் ஆகிவிட்டது இன்னும் திருமணம் ஆகவில்லை எனவே ரசிகர்கள் உங்களுக்கு எப்போது திருமணம் என பலமுறை கேட்டு வருகின்றனர் ஆனால் அது தான் எப்போது என தெரியவில்லை என இருவருமே பதில் கூற மறுத்து வருகின்றனர்.

விஜய் சேதுபதிக்கு என்ன ஒரு லக்கு என்றால் ஒரே படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து நடிப்பது தான் பல ஹீரோக்களுக்கு இவர்களுடன் நடிப்பது ஒரு கனவாகவே உள்ளது ஆனால் இவருக்கு என்ன அதிர்ஷ்டமோ என்னவோ தெரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பைக்கில் இருவரும் விஜய் சேதுபதியை டைட்டாக கட்டி பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு உடம்பெல்லாம் மச்சம் எனக் கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

vijaysethupathi11
vijaysethupathi11