தமிழ் சினிமாவில் ஒரு சின்ன நடிகர் கூட மிகப்பெரிய உச்சத்தை அடைய சிறப்பான கதையம்சம் இருந்தால் அதில் தனது திறமையை காட்டி எங்கேயோ செல்வார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக மாறி உள்ளவர் நடிகர் விஜய்சேதுபதி.
இவர் ஆரம்பத்தில் தரமான படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதால் மளமளவென உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் விஜய் உடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதில் பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதைவிட வாழ்ந்தார் என்று சொல்ல வேண்டும்.
இவரது நடிப்பைப் பார்த்து பல முன்னணி நடிகர்கள் கூட இவரை புகழ்ந்து தள்ளினார் அந்த வகையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி எனது நண்பன் விஜய்சேதுபதி இந்த படத்தில் அசத்திவிட்டார் என கூறினார். மாஸ்டர் படத்தில் இவரது நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்த இயக்குனர்கள் பலரும் நிறைய திரைப்படங்கள் இவருக்கு கொடுக்க வரிசை கட்டி நிற்கின்றனர்.
இவருக்கு தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் இவரது நடிப்பிற்கு தற்பொழுது மவுஸ் இருக்கிறது. அதனை உணர்ந்து கொண்ட விஜய் சேதுபதியும் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி அந்த வில்லன் ரோல்காக சுமார் 10 கோடி சம்பளம் பேசி இருந்தார். விஜய்செதுபதிக்கு தற்போது 7, 8 படங்கள் வரிசை கட்டி இருப்பதால் சம்பளத்தை இன்னும் அதிகரித்து உள்ளது அந்த வகையில் தெலுங்கு சினிமா படமொன்றில் வில்லனாக நடிக்க சுமார் 20 கோடி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.