தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் தற்போது சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு 3,4 படங்களில் கமிட் ஆகி உள்ளார். தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் உடன் இணைந்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அந்த படக்குழுவும் தற்பொழுது மற்ற வேலைகளை தொடங்கி உள்ளது அந்த வகையில் விஜயை வைத்து வம்சி எடுக்கும் படத்திற்கான வேலையை தற்போது தொடங்கியுள்ளார்.
இது இப்படி இருக்க விஜய் மற்றும் அவரது குடும்பம் பற்றிய செய்திகள் சமீபகாலமாக இணையதள பக்கத்தில் பரவி வருகின்றன. அப்படி தான் ஒரு செய்தி தற்போது வந்துள்ளது விஜய் தனது மனைவி மற்றும் குடும்பத்தை எப்படி வேண்டுமானாலும் மறைமுகமாக அழைத்து வந்தாலும் ஒரு சில தகவல்கள் எப்படியாவது வெளிவந்துவிடும்.
மேலும் ஒரு சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே தனது மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார் . அப்படி சங்கீதா ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் அப்போது பிரபல நடிகையான சங்கீதா விஜயின் மனைவியை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் கசிந்து வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.