தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி இவர் தற்பொழுது ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றனர் இதில் முதலாவதாக வெளிவந்தது முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் திரைப்படம்.
இன்று திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்பங்களை கவர்ந்து இழுக்கும் ஒரு என்டர்டைன்மென்ட் படமாக இருப்பதாக படத்தை பார்த்த ரசிகர்கள் தொடங்கி மக்கள் வரை அனைவரும் சொல்லி வருகின்றனர்.
இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், கருணாஸ், ராஜ்குமார், மைனா நந்தினி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ், பாரதிராஜா மற்றும் பலர் நடித்து அசத்தியுள்ளனர். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இதில் கார்த்தி, பிரகாஷ்ராஜ் அதிதி சங்கர் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பு பிரமாதம்.
அதிலும் குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு முதல் படம் போலவே தெரியவில்லை அந்த அளவிற்கு சூப்பராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த படம் கார்த்தி கேரியரில் மிக முக்கியமான ஒரு திரைப்படமாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை பார்க்க சினிமா பிரபலங்களும் தற்பொழுது படையெடுத்த வண்ணமே இருக்கின்றனர்.
அதில் முதலாவதாக தளபதி விஜயின் மனைவி சங்கீதா அவர்கள் விருமன் படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் விஜய் மனைவி சங்கீதா விருமன் படத்தை பார்க்க வந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்.
Sangeetha mam watches #Viruman with @AditiShankarofl pic.twitter.com/B8FDd2Tggl
— Vijay Girl Fans 💛 (@VjOverseasGFans) August 12, 2022