தளபதி விஜய் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் மிக கடினமாக உழைத்து முன் வந்தார். ஆனால் இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பிரபல இயக்குனர் என்பதால் அவரது படங்களிலேயே விஜய் ஆரம்பத்தில் அதிகம் நடித்து அறிமுகமானார். பின்பு ஒரு கட்டத்தில் ஹீரோவாக காதல் ஆக்ஷன் சென்டிமென்ட் போன்ற பல படங்களை தேர்வு செய்து நடித்து சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
அதோடு மட்டுமல்லாமல் தற்போது உச்ச நட்சத்திர நடிகராக திகழ்ந்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராகவும் விஜய் இருந்து வருகிறார். இதுவரை தமிழ் சினிமாவில் 65 படங்களில் நடித்து முடித்துள்ள விஜய் தற்போது தனது 66 வது படமான வாரிசு என்னும் திரைப்படத்தில் வம்சியுடன் கைகோர்த்து நடித்த வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்றது படம் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தனது 67வது படத்திலும் விஜய் இணைய உள்ளார். இப்படி சினிமாவில் தொடர்ந்து நடித்து ஓடிக் கொண்டிருக்கும் விஜய் ஒவ்வொரு படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தி 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்த தகவல்கள் சில சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது வந்த தகவல் என்னவென்றால் விஜயின் அம்மா ஷோபா மருமகள் சங்கீதா பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியது சங்கீதாவும் நானும் நல்ல நண்பர்கள் போல் தான் இருப்போம். வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதில் அவரை மிஞ்ச ஆளே இல்லை.
வீடு குழந்தைகளை தவிர வேறு ஒன்றும் சங்கீதாவுக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். நல்ல மருமகளாகவும் திகழ்ந்து வருகிறார். பேரன் பேத்திகள் இருவரும் அமைதியானவர்கள் என்றும் ஷோபா கூறியுள்ளார். இப்படி விஜயின் தாய் ஷோபா ஒரு பக்கம் பேசி இருக்க மறுப்பக்கம் தற்போது விஜய் மற்றும் சங்கீதா இருவரும் உங்களை கண்டு கொள்வதில்லை எனவும் விமர்சனங்கள் வருகின்றன.