பொங்கல் ரேஸில் இருந்து கழண்ட விஜயின் “வாரிசு படம்” – ரிலீஸ் தேதி மாற்றம்.?

vijay-
vijay-

தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக வைகோர்த்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது இந்த படத்தை தில் ராஜு தயாரித்து உள்ளார். நடிகர் விஜய் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதையில் நடிக்கிறார்.

இதுவரை அவர் ஆக்சன் படங்களில் நடித்து வந்த நிலையில் வாரிசு படத்தில் அவர் ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையில் நடிப்பதால் இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே சொல்லப்பட்டது ஆனால் தற்பொழுது நிலவும் சூழல் வாரிசு படத்திற்கு சாதகமாக இல்லாமல் இருப்பதால் பட குழு சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது.

தெலுங்கு சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்கள் முதலில் தெலுங்கு படத்திற்கு தான் அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் பிறமொழி படங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர். மேலும் தமிழகத்தில் விஜய் படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது இது ஒரு போட்டியாக இருந்தாலும்..

இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட்ஸ் மூவி நிறுவனம் கைப்பற்றி உள்ளது இது பிரபல தயாரிப்பு நிறுவனம் என்பதால் அஜித்தின் படத்துக்கே அதிக திரையரங்குகள் கிடைக்கும் இதனால் விஜய்யின் வாரிசு படத்திற்கு இன்னொரு மரண அடி கொடுத்து இருக்கிறதாம் இது எல்லாம் யோசித்துப் பார்த்து தற்பொழுது பட பிரமோஷனை ஒதுக்கி வைத்து படத்தின் ரிலீஸ் தேதியையும் மாற்றி உள்ளது வாரிசு பட குழு.

விஜயின் வாரிசு படம் பத்து நாட்கள் தள்ளி ஜனவரி 26 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்திருக்கிறதாம் ஜனவரி 14ஆம் தேதி வர வேண்டிய படம் தற்போது ஜனவரி 26க்கு தள்ளி போய் உள்ளது தற்பொழுது விஜய் ரசிகர் மத்தியில் இது சற்று சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.