விஜயின் “வாரிசு திரைப்படம்” இப்படித்தான் இருக்கும் – குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்.! பிரபல நடிகை பேட்டி.

vijay
vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் அண்மை காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்களை திரையரங்கு பக்கம் இழுத்து வருகிறது அதன் காரணமாக இவரது படங்கள் வசூல் வேட்டை நடத்துகின்றன அந்த வகையில் கடைசியாக விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கூட 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படம் வாரிசு இந்த படம் அவருக்கு 66 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் தில் ராஜு பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இந்தப் படத்தில் விஜயுடன் கை கோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சங்கீதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து உள்ளனர் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. வாரிசு திரைப்படத்தில் விஜய் ஒரு பணக்காரராக நடிக்கிறார்.

என ஏற்கனவே சில தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தில் நடித்த பிரபல நடிகை சங்கீதா ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது சில கேள்விகளுக்கு பதில் அளித்தார் அதில் ஒன்றாக வாரிசு திரைப்படம் குறித்தும் அவர் கூறியுள்ளார்.. தளபதி விஜய் பல வருடங்கள் கழித்து இப்படி ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

actress sangeetha
actress sangeetha

வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப என்டர்டைன்மெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தில் ஒரு நல்ல மெசேஜ் இருக்கு குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என கூறி உள்ளார் இந்த தகவல் தற்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது மேலும் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.