விஜய்யின் வாரிசு படத்தின் மொத்த வசூல் 100 கோடியா.? கண்ணீர் விட்டு கதறும் வம்சியின் தந்தை…

varisu
varisu

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படமும் விஜயின் வாரிசு திரைப்படம் ஒரே தினத்தில் மோதிக்கொண்டது இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வரும் வாரிசு மற்றும் துணிவு  ஆகிய இரண்டு படங்களும் வசூலில் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் வாரிசு படத்தை விட துணிவு திரைப்படத்தின் வசூல் நூறு கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று வாரிசு படத்தை வாரசுடு என்று தெலுங்கில் வெளியிடப்பட்டது. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவியின் படங்களான வால்டர் வீரையா மற்றும் வீர சிஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது இதனால் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தெலுங்கில் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழில் வாரிசு என்ற டைட்டிலில் வெளியான இந்த திரைப்படம் தெலுங்கில் வாரசுடு என்று வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் மொத்த வசூல் தற்போது 100 கோடியை தொட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் 2023 ஆம் ஆண்டில் 100 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை விஜயின் வாரிசு படம் தட்டிச் சென்றது.

இதனை தொடர்ந்து வாரிசு படத்தை தெலுங்கில் பார்க்க வாரிசு பட இயக்குனர் வம்சி அவர்கள் தனது தந்தையுடன் படம் பார்க்க சென்று இருக்கிறார் அப்போது அந்த படத்தை பார்த்த வம்சியின் தந்தை படத்தை பார்த்த பூரிப்பில் தனது மகனை கட்டியணைத்து கண்ணீர் விட்ட காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.