தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி எடுத்து வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தளபதி விஜய் தனது 67வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் இதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் வைத்து மாஸ்டர் என்னும் வெற்றி படத்தை கொடுத்தார் இதனால் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
தளபதி 67 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறதாம் இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் போன்ற பிரபலங்கள் நடிக்க இருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் இது குறித்து இன்னமும் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல் படக்குழு வெளியிடவில்லை..
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது விஜயுடன் படங்களிலும் மற்றும் உண்மையில் நண்பராக இருந்து வருபவர் பிரபல நடிகர் சஞ்சீவ் இவரது மனைவி சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்.. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து சொன்னது விஜய்க்கு மிகவும் பிடித்த உணவுகள்..
விரல் விட்டு என்னும் வகையில் தான் இருக்கிறது அதிலும் குறிப்பாக மட்டன் கீமா, குலோப் ஜாமுன், பிரியாணி இந்த மூன்று உணவுகள் விஜய்க்கு ரொம்பவும் பிடிக்கும் விஜயின் கல்லூரி நண்பரும் நடிகர் மன சஞ்சீவீன் மனைவி சொல்லி இருக்கிறார் இந்த தகவல் தற்பொழுது தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..