விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் – ஹீரோ யார் தெரியுமா.? உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் அதிக வெற்றி படங்களை கொடுத்து வலம் வருகிறார் இதனால் நாளுக்கு நாள் விஜயின் சினிமா பயணமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அதற்கு ஏற்றார்போல சம்பளத்தையும் அதிகமாக வாங்குகிறார்.

சொல்லப்போனால் இப்பொழுது ஒரு படத்துக்கு கிட்டத்தட்ட 100 கோடி சம்பளம் கேட்கிறார் என்ற தகவல் உலா வருகிறது. தளபதி விஜய் தனது 66வது திரைப் படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய்யின் பல சூப்பர் ஹிட் படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படும் என்பது கால காலமாக நடக்கிறது.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் தெறி இந்த படம் தமிழ்நாட்டையும் தாண்டி பிற மொழிகளிலும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படம் விஜய் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது இந்த படம் ஆக்ஷன் சென்டிமெண்ட் காமெடி கலந்த திரைப்படமாக உருவாகி இருந்தது.

தெறி படத்தில் விஜயுடன் கைகோர்த்து எமி ஜாக்சன், சமந்தா, மீனாவின் குழந்தை நைனிகா, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். இந்த படம் அப்போது வெளியாகி மிகப்பெரிய ஒரு வசூல் சாதனை படைத்தது.

இந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன இந்த படத்தில் ஹீரோவாக பவன் கல்யாண் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகுவரைவிலேயே வரும் என தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

Exit mobile version