விஜயை தேடிப்போன சூப்பர் ஹிட் படம் – தவறவிட்டது எப்படி.? வெளிவரும் உண்மை தகவல்.!

vijay-
vijay-

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக விளங்குகிறார் இவர் கடைசியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து இப்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல்முறையாக கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய் வருகிறது. வாரிசு படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் தேடி வந்த சூப்பர் ஹிட் படத்தை தவற விட்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் 1999 ஆம் ஆண்டு பிரசாந்த் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜோடி.

இந்த படத்தை பிரவீன் காந்தி என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில்  சிம்ரன் பிரசாந்தை தவிர்த்து சக்தி சிதம்பரம் திரிஷா ஜனகராஜ் ரமேஷ் கண்ணா விஜயகுமார் லட்சுமி தாமுன் நிழல்கள் ரவி என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த படம் அப்பொழுது வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

jodi
jodi

ஆனால் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் விஜய் தானாம். இயக்குனர் காந்தி படத்தின் கதையை கூறியுள்ளார். அப்பொழுது விஜய் மற்ற படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததால் அவருடைய கால் ஷிட் கிடைக்காத காரணத்தினால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதாம் பிறகு பிரசாந்திடம் கதையை சொல்லி கமிட் செய்ததாக கூறப்படுகிறது.