தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார் இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ராதிகா, குஷ்பூ, ஷாம் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகுவதாக ஏற்கனவே இந்த படத்தின் தயாரிப்பாளர் கூறி இருந்தார்.
ஆனால் தற்பொழுது இந்த படத்தில் நடித்து வரும் சரத்குமார் இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் படம் அல்ல அதுக்கும் மேல ஆக்சன் காமெடி என அனைத்தும் இதில் இருக்கிறது என தற்போது கூறியுள்ளார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது இந்த நிலையில் வாரிசு படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் ஆகியவை பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது வாரிசு படத்தின் டெலிவிஷன் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. அதுவும் சுமார் 25 கோடிக்கு இந்த படத்தை கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. விஜயின் படத்தை எப்பொழுதுமே சன் தொலைக்காட்சி தான் முதலாவதாக எவ்வளவு பெரிய தொகை கொடுத்தாவது வாங்கிவிடும்.
காரணம் விஜய் படங்கள் சன் டிவியில் எப்பொழுதுமே நல்ல வரவேற்பை பெறுகின்றன அதனால்தான் இப்பொழுதும் அதிக விலை கொடுத்து தற்போது வாரிசு படத்தை கைப்பற்றியுள்ளதாம். வாரிசு படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. அதுவும் கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.