தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜய். தற்பொழுது அடுத்தடுத்த ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்பொழுது விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
இப்போ விஜய் படத்தில் நடித்தால் மட்டுமே போதும் அந்த படம் சூப்பர் ஹிட் நிலைமைக்கு மாறி உள்ளது காரணம் ரசிகர்களையும் தாண்டி குழந்தைகளும் பெண்களும் அவரது படத்தை குடும்பம் குடும்பமாக பார்க்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வி படம். அதேசமயம் விஜயின் படங்களை அப்பொழுது பார்ப்பது பெரிதும் ரசிகர்கள் மட்டும்தான்.
காரணம் விஜய் படத்தில் அதிகம் ரொமான்டிக் சீன் தான் இருக்கும் இதனால் ரசிகர்கள் மட்டுமே அதிகம் பார்த்து வந்தனர் பெண்களும், குழந்தைகளும் விஜய் படத்தை ஆரம்பத்தில் பார்ப்பதில்லை. இதை உணர்ந்து கொண்ட விஜய் அனைவரையும் கவரும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என நினைத்தார் ஒவ்வொரு படமாக நடிக்க ஆரம்பித்தார்.
அப்படித்தான் இவர் நடித்த பூவே உனக்காக திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி குழந்தைக்கும் மக்களுக்கும் பிடித்த திரைப்படமாக இருந்ததால் சூப்பராக ஓடி வெற்றியை ருசித்தது. விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் விஜய் முற்றிலுமாக வித்தியாசமாக நடித்திருந்தார் இந்த படம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் மட்டும் சுமார் 365 நாட்கள் ஓடி உள்ளது.
முதலில் இந்த படத்தை பார்க்க பெரிய அளவு கூட்டம் இல்லை ஆனால் போகப்போக ரசிகர்களை தாண்டி குழந்தைகளும், குடும்பங்களும் பார்க்க தொடங்கியதால் இந்த படம் அப்பொழுது நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி அசத்தியது இந்த படம் விஜய்யின் சினிமா கேரியரில் மிக முக்கியமான ஒரு திருமுனை படமாக அமைந்தது.
அதன் பிறகு தான் தளபதி விஜய்யும் தொடர்ந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்குமாறு படங்களில் நடிக்க ஆரம்பித்தாராம். இதனை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். பூவே உனக்காக திரைப்படத்தில் விக்ரமனின் உதவி இயக்குனராக இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.