சூப்பரான கதையை எடுத்துக் கொண்டு வந்த முன்னணி இயக்குனர் – வேண்டாம் என மறுத்த விஜய்யின் மகன்.? பேட்டியில் சொன்ன தளபதி.

vijay and nelson
vijay and nelson

தளபதி விஜய் வெற்றிகரமாக தனது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணாதாஸ், செல்வராகவன் ரெட்டின் கிங்ஸ்லி, யோகி பாபு மற்றும் பலர் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.

படம் வெளிவர இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருப்பதால் படக்குழு பிரமோஷன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது குறிப்பாக இந்த படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் மற்றும் இயக்குனர் பல்வேறு  பேட்டிகள் கொடுத்து அசத்தி வருகின்றனர்.

அப்படி நேற்று சன் டிவி தொலைக் காட்சிக்கு நெல்சன் மற்றும் விஜய் ஆகியோர் கலந்துகொண்டு அசத்தினர் இதில் பல்வேறு விதமான கேள்விகளை நெல்சன் கேட்டார் அப்பொழுது அனைத்திற்கும் விஜய் பதிலளித்தார்.

அதில் ஒன்று உங்கள் மகன் சஞ்சய் எப்போது நடிக்க வருவார் என நெல்சன் கேட்டதற்கு விஜய் கூறியது அது அவனோட இன்ட்ரஸ்ட். அவர் நடிக்க வேண்டும் என நினைத்தால் என்னுடைய சப்போர்ட் இருக்கும் சிலர் கதையுடன் வருவார்கள் அதை அவனிடம் சொன்னேன் என்னை 2 வருஷம் விட்டிடுங்க என அவன் சொன்னான்.

பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கதை சொல்ல வந்தார் அது எனக்குத்தான் என முதலில் நினைத்தேன் ஆனால் சஞ்சய்க்கு என பின்னர் தான் கூறினார் கதை நன்றாக இருந்தது பாய் நெக்ஸ்ட் டோர் ரோல். அதில் நடிக்க அவன் ஒப்புக் கொள்ள வேண்டுமென நான் விரும்பினேன் ஆனால் சஞ்சய் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என பேட்டியில் கூறினார்  விஜய்.