விஜய்யின் மகன் எடுக்கும் புதிய அவதாரம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்ட லைக்கா.!

vijay
vijay

Janson Sanjay: நடிகர் விஜய்யின் மகன் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாக இருக்கும் நிலையில் இது குறித்த லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமான அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து காதல் படங்களில் நடித்து வந்த விஜய் சமீப காலங்களாக கமர்சியல் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். அப்படி தற்பொழுது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று சர்வதேச அளவில் வெளியாக உள்ளது.

எனவே இதற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். அப்படி இசை வெளியீட்டு விழா வருகின்ற அக்டோபர் 5ம் தேதி அன்று நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 68வது படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

எனவே லியோ படத்தின் ரிலீஸ்க்கு பிறகு தளபதி 68 படத்தின் பூஜை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் விஜய் திரையுலகிற்கு கால் பதிக்கவுள்ளார். அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாக உள்ளது. அந்த வகையில் தற்பொழுது சஞ்சய் விவரித்த ஸ்கிரிப்ட் பிடித்ததால் அவருடன் லைக்கா நிறுவனம் கைகோர்க்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த படத்தின் புதுமுகங்கள் களமிறங்க இருப்பதாகவும் பிரபல தொழில்நுட்பகளுடனும் இந்த படம் நடத்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து ஜேசன் சஞ்சய் முதல் படத்திலேயே லைக்கா போன்ற பெரிய நிறுவனத்துடன் கைகோர்ப்பது குறித்து உற்சாகம் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு அதிகமான பொறுப்பையும் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய ஸ்கிரிப்ட்டை தானே உருவாக்க அதிகமான சுதந்திரத்தையும் லைக்கா வழங்கி உள்ளது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.