விஜய் டிவியில் சிங்கிளாக சுத்திவந்த “புகழ்” – இப்போ மிங்கில் ஆகிவிட்டார் யாருடன் தெரியுமா.? இதோ புகைப்படம்.

pukazh

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சிரிச்சா போச்சு போன்ற காமெடி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓரளவு பிரபலம் அடைந்த புகழ் பின்பு குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் காமெடியனாக கலந்து கொண்டதன் மூலம் பல்வேறு ரசிகர்கள் கூட்டத்தையே பெற்றார்.

மேலும் குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசன்களில் கலந்துகொண்டு பிரபலமடைந்த புகழுக்கு தற்போது வெள்ளித்திரையில் பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆம் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி திரைப்படத்தில் முக்கிய ரோலில் புகழும் நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் இதனையடுத்து டாப் ஹீரோவான அஜித் நடிப்பில் உருவாகி திரையரங்குக்கு வர தயாராக உள்ள “வலிமை” திரைப்படத்திலும் புகழ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் பொங்கலன்று வெளியான அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இப்படி திரைப்படங்களில் புகழ் பிஸியாக உள்ளதால் அடுத்த வாரம் வர இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 இந்நிகழ்ச்சியில் புகழ் தொடர்ந்து கலந்து கொள்ளப்போவதில்லை எனவும் மேலும் ஒரு சில வாரங்களில் மட்டும் வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் புகழ்.

தற்போது ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ஹாப்பி பர்த்டே பார்ட்னர் லவ் யூ  என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது லைக்குகளையும் கமெண்ட் களையும் குவித்து வருகின்றனர் மேலும் ரசிகர்கள் பலரும் கமெண்டுகளில் திருமணம் எப்போது என கேள்வி கேட்டு வருகின்றனர்.

pukazh
pukazh