தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன விஜய் தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங்கில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இவருடன் இணைந்து இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், மனோபாலா, குஷ்பூ, ஷாம் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அண்மையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படக்குழு அடுத்தடுத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியீட்டு அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் விஜய் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துப் போய் கொண்டாடி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படத்திற்காக தளபதி விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக தளபதி விஜய் இருக்கிறாராம் இவர் வாரிசு திரைப்படத்திற்காக சுமார் 118 கோடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பீஸ்ட் படம் சரியாகப் போகவில்லை என தெரிந்தும் தனது சம்பளத்தை குறைக்காமல் உயர்த்தி வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பீஸ்ட் படத்திற்காக 100 கோடி வாங்கிய விஜய் அடுத்த படத்தில் நடிப்பதற்கு 18 கோடி உயர்த்தி 118 கோடி வாங்கி உள்ளார்.