விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர் இதுவே படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம்.
அதைத்தொடர்ந்து படம் வெளி வருவதற்கு முன்பே வெங்கட் பிரபு மற்றும் அவருடைய கேங்க் கொடுத்த அலப்பறைகளும் வேற லெவலில் இருந்தது. இதனாலேயே பல கிலோமீட்டர் தூரம் சென்று டிக்கெட் புக் செய்தவர்களும் உண்டு.
இப்படி பெரும் ஆரவாரமாக இருந்த கோட் படத்திற்கு தற்போது பாசிட்டிவ் நெகட்டிவ் என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் சிலர் வெங்கட் பிரபுவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதற்கு சில காரணங்களும் இருக்கிறது. அதாவது விஜய்யை குஷி படுத்த வேண்டும் என்பதற்காக படத்தில் சில குறியீடுகளை அவர் வைத்துள்ளார். அதாவது தமிழக வெற்றி கழகத்தின் கொடியின் கலர் சிவப்பு மஞ்சள் ஆகும்.
கோட் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கும் திரிஷா அணிந்திருந்த புடவையின் கலரும் அதுதான். இதை தற்போது நோட் செய்திருக்கும் ரசிகர்கள் இதெல்லாம் படத்திற்கு தேவையா எதுக்கு இந்த அரசியல் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோல் விஜய் வரும் காரின் நம்பர் பிளேட் CM 2026 என இருக்கிறது. இதுவும் இப்போது கலாய்க்கப்பட்டு வருகிறது. வெங்கட் பிரபு விஜய்க்கு நன்றாக ஐஸ் வைத்து மொக்கை செய்துவிட்டார்.
படத்தை ஹிட் ஆக்க வேண்டும் என்றும் அஜித் ரசிகர்களையும் மனம் குளிர்விக்க வேண்டும் எனவும் சில வேலைகளை அவர் பார்த்திருக்கிறார். இதனால் பாவம் விஜயின் தலை தான் இப்போது சோஷியல் மீடியாவில் உருண்டு கொண்டிருக்கிறது.