தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தனது 66 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதல் கட்டப்பட பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, குஷ்பூ, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
படம் அடுத்த வருடம் 2023 பொங்கல் அன்று வெளியாக இருப்பதாக படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் வருகின்ற பொங்கல் அன்று பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படமும் வெளியாக இருப்பதால் வாரிசு படத்தின் ரிலீஸ் சற்று விலக வாய்ப்பு இருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளி வருகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படத்திலிருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது வாரிசு படத்தில் விஜயின் பெயர் ராஜேந்திரன் எனவும், இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் விஜயின் காட்சிகள் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது அதாவது இந்த படத்தில் சரத்குமாருக்கு மூன்று பசங்கள் அதில் கடைசி பையனாக விஜய் நடிக்கிறார்.
தனது அப்பாவின் பிசினஸை நல்லபடியாக எப்படி பார்த்துக் கொள்கிறார், அனைத்து தடைகளையும் உடைத்து எறிந்து எப்படி அதிலிருந்து மீண்டு வருகிறார் என்பதே விஜய் நடிக்கும் ரோலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனை வலைப்பேச்சு நண்பர்கள் அவர்களது யூடியூப் சேனலில் பேசினார்.