நண்பன் சஞ்சீவ் போட்ட ட்வீட்டால் டேமேஜ் ஆகும் விஜய் பெயர்.! கொந்தளித்த ரஜினிரசிகர்கள்.! அப்படி என்ன செய்தார் தெரியுமா.?

sanjav

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்வது வழக்கம் அந்த வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த பட்டத்தை அடுத்தது யார் பெறப் போகிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் நடப்பது இது ஒன்றும் புதிது அல்ல காலம் காலமாக நடந்து வருகிறது அந்த இடத்தை பிடிக்க தற்போது சினிமாவில் முயற்சித்து வருவார்கள் தான் அஜித் மற்றும் விஜய்.

super
super

அந்த இடத்தை பிடிக்க தற்போது அஜித் ,விஜய் சண்டை போடு கிறதோ இல்லையோ அவரது ரசிகர்கள் தினந்தோறும் சமூகவலைதளத்தில் சண்டை போட்டு வருகின்றனர் இந்த நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சய் அவர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு கூறி உள்ளார் பின்னர் ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் அதனை நீக்கினார்.

சஞ்சீவ் அவர்கள் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் போன்றவற்றில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தற்போது அவர் விஜய் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இவர் விஜய்யின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளிலும் துக்க காலத்திலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்  சஞ்சீவ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் அவர்கள் சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வேன் மீது ஏறி நின்று கொண்டு செல்பி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மேலும் இந்த செல்பி தற்போதுவரை ஒரு லட்சமாக RT இருந்தது என குறிப்பிட்டுள்ளார் இதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் .

சஞ்சீவ் அவர்கள் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டதால் ரஜினி ரசிகர்கள் அவரை அவரை விமர்சித்து வந்துள்ளனர் இதனை அடுத்து அவர் அந்த பதிவை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டார் இருப்பினும் அவர் போட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இருப்பினும் ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.ரஜினி அன்றும்,இன்றும் எப்பொழுதும் அவரே சூப்பர் ஸ்டார்.